உத்தரப்பிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தில் அமைந்துள்ள பாலியா நகரில் பாஜக அலுவலகம் ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் இந்த அலுவலகம் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

அதில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து பா.ஜ.க அலுவலகம் கட்டப்பட்டது உறுதியானது. ஆகவே அதிகாரிகள் உடனடியாக அந்த அலுவலகத்தை புல் டவுசர் கொண்டு இடித்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு அம்மாவட்ட பா.ஜ.க தலைவர் கண்டனம் தெரிவித்ததோடு இவ்விடத்தில் 20 வருடங்களுக்கு மேலாக அலுவலகம் அமைந்துள்ளதாகவும், அது அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.