இந்தியாவில் கடந்த 15 ஆண்டுகளாக செஸ் புரட்சி என்பது ஏற்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் கிராண்ட் மாஸ்டர்கள் உருவாகி இருக்கிறார்கள். கடந்த இரண்டே ஆண்டுகளில் இந்தியாவில் கிட்டத்தட்ட 12க்கும் மேற்பட்ட கிராண்ட் மாஸ்டர்கள் உருவாக்கியிருக்கிறார்கள்.

இந்தியாவினுடைய ஒரே கிராண்ட் மாஸ்டராக 2001 ஆம் ஆண்டு வரை விஸ்வநாதன் ஆனந்த் மட்டும் இருந்த நிலையில், அதனைத் தொடர்ந்து தற்போது கடந்த 20 ஆண்டுகளில் 78 கிரான்மாஸ்டர்கள் உருவாகியிருந்த நிலையில் 79வது கிராண்ட் மாஸ்டராக சென்னை சேர்ந்த  பிரனவ் உருவாகி இருக்கிறார்.

15 வயதான பிரனவ் 5 வயதில் இருந்து செஸ் விளையாடி வருகின்றார். ஏற்கனவே 7 வயதுக்கு உட்பட்டோர் தேசிய அளவிலான போட்டியில் தங்கம் வென்று தன்னுடைய செஸ் கேரியரை தொடங்கி இருக்கிறார். அதனைத் தொடர்ந்து தேசிய அளவிலான போட்டிகளில் தொடர்ச்சியாக வென்று வந்திருக்கிறார்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே செஸ் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறுவதற்காக முதல் நாமை அவர் பெற்றிருந்த நிலையில் தற்போது இரண்டாவது நாமை பெற்றுள்ளார். மூன்று நாம் பெற வேண்டி இருக்கும். அதே போல 2600புள்ளிகள் பெற வேண்டி இருக்கும். இவை  இரண்டையும் இன்று நடைபெற்ற செஸ் தொடரில் வெற்றி பெற்றதன்  மூலமாக இந்தியாவினுடைய 79வது கிராண்ட் மாஸ்டராக அவர் உருவாகியிருக்கிறார்.

தமிழகத்தில் மட்டும் இதுவரை 28 கிரான் மாஸ்டர்கள் உள்ளார்கள். வேறு எந்த மாநிலமும் அருகில் வரக்கூடிய அளவிற்கு தமிழகத்தினுடைய கிராண்ட் மாஸ்டர் எண்ணிக்கையும் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இன்னும் சொல்ல போனால் இந்தியாவினுடைய அடுத்த 80 மற்றும் 81 வது கிராண்ட் மாஸ்டரும் தமிழகத்தில் இருந்து வருவதற்கான அனைத்து வாய்ப்புகளும் இருக்கிறது.