நாடு முழுவதும் என்று நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளிலும் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் முன்னிலை பெற்று வெற்றியை கைப்பற்ற இருக்கிறது. மேலும் அதிமுக மற்றும் பாஜகவுக்கு ஒரு இடங்களில் கூட முன்னிலை கிடைக்காதது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.