சீனாவில் ஆசிய சாம்பியன்ஷிப் ட்ராபி தொடர் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஆரம்பம் முதல் இந்திய அணி ஒரு தொடரில் கூட தோல்வியை சந்திக்காமல் சிறப்பான முறையில் விளையாடி வருகிறது. அதன்படி லீக் சுறறுகளில் சீனா, ஜப்பான், மலேசியா மற்றும் கொரியா ஆகிய அணிகளை வீழ்த்திய இந்திய அணி கடைசி லீக் தொட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது. இதைத்தொடர்ந்து நேற்று நடைபெற்ற அறை இறுதி போட்டியில் தென் கொரியா அணியுடன் இந்தியா மோதியது.

விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் இந்திய அணி ஆரம்ப முதல் ஆதிக்கம் செலுத்திய நிலையில் 4-1 என்ற கோள் கணக்கில் சுலபமாக கொரியாவை வீழ்த்தியது. அதிகபட்சமாக கேப்டன் ஹர்மன் பிரீத் சிங் 2 கோல்கள் வரை அடித்திருந்தார். இந்த வெற்றியை தொடர்ந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி இன்று சீனாவுடன் மோதியது. சீனா மற்றும் இந்தியா இடையே கோப்பையை வெல்வதற்கான இறுதிப் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில்.இந்தப் போட்டியில் சீனாவை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி இந்தியா கோப்பையை வென்றுள்ளது. மேலும் ஆசிய சாம்பியன்ஷிப் ட்ராபியை தட்டி தூக்கிய இந்திய ஹாக்கி அணிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.