சமீப காலமாக ஆன்லைன் பண மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இன்றைய காலகட்டத்தில் இந்தியா முழுவதும் பலரும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். இதனால் டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆன்லைன் மோசடிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மக்கள் தங்களுடைய பணத்தை இழந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அந்தவகையில் தற்போது வருமான வரி செலுத்துவோரை குறிவைத்து தற்போது மோசடிகள் நடப்பதாக உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது. வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்யும் நேரம் என்பதால் ரீபண்டு வாங்கித் தருவதாக மோசடிக் காரர்கள் மெசேஜ் அனுப்புகின்றனர். அவர்களிடம் ஏமாந்து தகவல்களை தருவோரிடம் பணம் அல்லது வங்கி விவரங்கள் திருடப்படுகின்றன. வருமான வரி தாக்கலினை நீங்களே செய்யுங்கள். அல்லது தெரிந்த ஆடிட்டர்களிடம் கொடுத்து செய்யுங்கள்.