பான் எண்ணுடன் ஆதார் எண்ணை மார்ச் 31ம் தேதிக்குள் இணைக்காவிட்டால் வணிகம் மற்றும் வரி தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது என்று மத்திய நேரடி வரிகள் வாரியயத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். மார்ச் 31 ஆம் தேதிக்குள் இந்த வேலையை முடிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அவ்வாறு இணைக்காவிட்டால் பான் கார்டு செயலிழந்து விடும் என்று அரசு தெளிவுபடுத்தி உள்ளது. தற்போது முதல் மார்ச் 3-ம் தேதிக்குள் ஆதார் இணைப்பை மேற்கொள்பவர்களுக்கான கட்டணம் ஆயிரம் ரூபாய் ஆகும்.

மார்ச் 31 ஆம் தேதிகள் இணைப்பை இணைக்காவிட்டால் அவர்களுடைய பான் அட்டை செயலற்றதாகிவிடும் என்பதால் வரிச் சலுகைகளை அவர்கள் இழக்க நேரிடும். செயலற்ற பான் அட்டை மூலம் வரிதாக்கல் செய்ய முடியாது. நிலுவையில் உள்ள வரி தாக்கல் நடைமுறையில் மேற்கொள்ளப்படாது. மேலும் நிலுவையில் உள்ள வருமான வரி ரீபண்டு தொகையும் செயலற்ற அந்த பான் அட்டைக்கு செலுத்தப்படாது. இது போன்ற பல்வேறு சிக்கல்களை ஆதார்- பான் இணைகாதவர்கள் நேரிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.