
பீகார் முதல்வரான நிதிஷ் குமாருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என அவரது தொண்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர். பாஜக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் நிதிஷ் குமார், கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்தார்.
நிதிஷ் குமாரின் ஆதரவாளர்கள், அவருடைய பணி மற்றும் சாதனைகளைக் குறிப்பிட்டு, நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னாவை வழங்க வேண்டும் என உறுதியாக கூறுகின்றனர். பீகார் மாநிலத்தின் வளர்ச்சிக்கு நிதிஷ் குமார் முக்கிய பங்காற்றி வருகிறார் என்பதையும், அவர் சோசியலிசவாதத்தின் வழியில் செயல்படுகிறார் என்பதையும் தொண்டர்கள் மீண்டும் நினைவுகூறியுள்ளனர்.
நடைபெற்ற ஜனதா தள கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில், முக்கிய தலைவர் சோட்டு சிங், நிதிஷ் குமாருக்கு பாரத ரத்னா வழங்கப்பட வேண்டும் என்ற அவரது விருப்பத்தை வெளிப்படுத்தினார்.