அதிமுகவின்  52 ஆம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பத்திரிக்கையில் பார்த்தேன்…  திருப்பத்தூர் மாவட்டத்தில உயர்நிலைப் பள்ளியில் மொத்தம் 300 பேர் இருக்காங்க. அதுல 75 பேருக்கு காய்ச்சல்… 75 பேருக்கும் ஒரே பள்ளிக்கூடத்தில் காய்ச்சல் வந்திருக்கிறது…. பள்ளிக்கூடத்தையே விடுமுறை விட்டுட்டாங்க….  இந்த விடியா திமுக ஆட்சியில்….. மக்களை வாட்டி விதக்கின்ற காட்சி பார்க்கிறோம்…. நோய் வாய்ப்பட்டு இருக்கின்ற மக்களுக்கு சிகிச்சை அளிக்க முடியல..

டெங்கு காய்ச்சலை குறைக்க முடியல…. மலேரியாவை கட்டுப்படுத்த முடியல… இப்படிப்பட்ட ஒரு நிலைமை…. அதோடு சளி தொல்லைக்கு மருத்துவமனைக்கு போனால் வெறி நாய்க்கடி ஊசி போட்டுறாங்க….. எல்லாரும் ஜாக்கிரதையா ஹாஸ்பிடலுக்கு போங்க…. ஏன்னா சளிக்குனு போனா… வெறிநாய்க்கடி ஊசி போடுறாங்க இந்த அரசாங்கத்தில்….

அதேபோல இன்றைக்கு கையோட போனால் அரசாங்க ஹாஸ்பிடலில் கையில்லாமல் வராங்க…. காலோட போனால்… கால் இல்லாமா வராங்க… உயிரோட போனால்,  உயிர் இல்லாதது தான் போகணும்…. இப்படிப்பட்ட ஆட்சி தான் இன்னைக்கு தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது…. இன்னைக்கு மருத்துவத்துறை ஒரு அவலமடைந்த துறையாக இன்றைக்கு பார்க்கின்ற காட்சி நாம் பார்க்கிறோம்.

எங்கு பார்த்தாலும் மருந்து தட்டுப்பாடு…. மருந்தே இல்லை…. முறையா சிகிச்சை அளிக்க முடியவில்லை… மருத்துவர்கள் இல்லை…  இதை சொன்னால் உடனே,  சுகாதாரத்துறை அமைச்சர் வேண்டும் என்று திட்டமிட்டு எதிர்க்கட்சித் தலைவர் ஒரு தவறான தகவலை கொடுக்கிறார்கள் என்று  சொல்லுறாரு…

எப்படி இப்படி மருத்துவ சிகிச்சை அளிக்கக்கூடிய  மருத்துவமனையில் இப்படிப்பட்ட அவல நிலையிலே இருக்கிறது… இனியாவது  விடியா திமுக அரசு விழித்துக் கொண்டு,  தேவையான மருந்தை மருத்துவமனை கொடுத்து மக்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று இந்த கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.