மேற்கு வங்காள மாநிலம் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி சத்ருகன் சின்ஹா கூறியதாவது, நாடு முழுவதும் அசைவ உணவுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மாட்டிறைச்சைக்கு நாட்டின் பல மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டிருப்பதை வரவேற்றுள்ள அவர், அதேபோன்று அசைவ உணவுகளையும் தடை செய்தால் மிக நன்றாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் வட கிழக்கு மாநிலங்களில் மாட்டிறைச்சி விற்கப்படுவது வேதனைக்குரியது என்றும் அவர் கூறினார். வட இந்தியாவில் அசைவ உணவு தடையை செயல்பாட்டுக்கு கொண்டு வருவது சாத்தியம் இல்லை. இருப்பினும் ஒரு சில இடங்களில் மட்டுமின்றி அணைத்து இடத்திலும் இதை செயல்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.