டேவிட் வார்னர் ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையில் 20வது சதத்தை அடித்து, சச்சின் டெண்டுல்கரின் பெரிய சாதனையை முறியடித்தார்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவின் தொடக்க பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் சதம் அடித்தார். டேவிட் வார்னர் 93 பந்துகளில் 106 ரன்கள் குவித்தார். இதன் மூலம் வார்னர் தனது ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையில் 20வது சதத்தை அடித்தார். டெஸ்டில் 25 சதங்களையும், டி20 போட்டிகளில் 1 சதங்களையும் அடித்துள்ளார். அதே சமயம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இது அவரது 5வது சதம்.

மோசமான பார்மில்சென்ற டேவிட் வார்னர் உலகக் கோப்பைக்கு முன் அவர் மீண்டும் ஃபார்மிற்கு திரும்ப வேண்டியது அவசியம். முதல் போட்டியில் டேவிட் வார்னர் பூஜ்ஜியத்தில் ஆட்டமிழந்தாலும், இரண்டாவது போட்டியில் டேவிட் வார்னர் எச்சரிக்கையுடன் விளையாடி சதம் அடித்தார். வார்னர் தனது இன்னிங்ஸின் போது 3 சிக்ஸர்கள் மற்றும் 12 பவுண்டரிகளை அடித்தார்.

சச்சின் சாதனை முறியடிக்கப்பட்டது :

சதம் அடித்த பிறகு, டேவிட் வார்னர் சச்சின் டெண்டுல்கர் ஒரு பெரிய சாதனையை முறியடித்தார். சர்வதேச கிரிக்கெட்டில் தொடக்க ஆட்டக்காரராக டேவிட் வார்னர் தனது 46வது சதத்தை பூர்த்தி செய்தார். சர்வதேச கிரிக்கெட்டில் தொடக்க ஆட்டக்காரராக சச்சின் டெண்டுல்கர் 45 சதங்கள் அடித்துள்ளார். அதே சமயம் கிறிஸ் கெயில் 42 சதங்களுடன் 3வது இடத்தில் உள்ளார்.

தொடக்க ஆட்டக்காரராக 346 போட்டிகளில் விளையாடி 45 சதங்கள் அடித்து சாதனை படைத்திருந்த சச்சின் டெண்டுல்கரை இந்த சாதனை முறியடித்துள்ளது . வார்னர் தனது 343வது சர்வதேச போட்டியில் இந்த மைல்கல்லை எட்டினார், அதை அடைய 428 இன்னிங்ஸ்கள் எடுத்தார். ஒப்பிடுகையில், டெண்டுல்கர் ஒரு தொடக்க வீரராக 342 இன்னிங்ஸ்களில் மட்டுமே பேட்டிங் செய்தார். வார்னர் மற்றும் டெண்டுல்கரைத் தவிர, மேற்கிந்தியத் தீவுகளின் கிறிஸ் கெய்ல் 506 இன்னிங்ஸில் 42 சதங்கள், இலங்கையின் சனத் ஜெயசூர்யா 563 இன்னிங்ஸ்களில் 41 சதங்கள், மற்றும் ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹைடன் 340 இன்னிங்ஸ்களில் 40 சதங்களுடன் இந்த பிரத்யேகப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

தற்போதைய வீரர்களில், இந்திய கேப்டன் ரோஹித் சர்மா 312 இன்னிங்ஸ்களில் 39 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார். ஒட்டுமொத்தமாக, ரோஹித் 6வது இடத்தில் உள்ளார்.

தொடக்க பேட்ஸ்மேன்களால் அதிக சதங்கள் :

46 – டேவிட் வார்னர்

45 – சச்சின் டெண்டுல்கர்

42 – கிறிஸ் கெய்ல்

41 – சனத் ஜெயசூர்யா

40 – மேத்யூ ஹெய்டன்

39 – ரோஹித் சர்மா

37 – ஸ்டீவ் ஸ்மித்

தொடக்க வீரராக 6000 ரன்களை கடந்தார் :

இந்த சதத்தின் போது டேவிட் வார்னர் ஒருநாள் கிரிக்கெட்டில் தொடக்க ஆட்டக்காரராக 6000 ரன்களை கடந்தார். வார்னர் 140 இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல்லை எட்டினார். இந்தப் பட்டியலில் ரோஹித் சர்மா முதலிடத்தில் உள்ளார். ரோஹித் 121 இன்னிங்ஸ்களில் ஒருநாள் போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக 6000 ரன்களை கடந்திருந்தார். இந்த பட்டியலில் ஷிகர் தவான் 4வது இடத்தில் உள்ளார்.

ஒரு தொடக்க ஆட்டக்காரராக 6000 ஒருநாள் ரன்களைக் கடந்த வேகமான பேட்ஸ்மேன் :

121 இன்னிங்ஸ் – ரோஹித் சர்மா

123 இன்னிங்ஸ் – ஹஷிம் அம்லா

133 இன்னிங்ஸ் – சச்சின் டெண்டுல்கர்

140 இன்னிங்ஸ் – டேவிட் வார்னர்

140 இன்னிங்ஸ் – ஷிகர் தவான்

143 இன்னிங்ஸ் – சவுரவ் கங்குலி

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டேவிட் வார்னர் தனது 5வது சதத்தை அடித்தார். அதே நேரத்தில், சச்சின் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 5 சதங்களையும் அடித்துள்ளார். 3வது இடத்தில் (4 சதங்கள்) விராட் கோலி உள்ளார்.

போட்டி நிலவரம் :

தென்னாப்பிரிக்கா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்யும் வாய்ப்பை ஆஸ்திரேலியாவுக்கு வழங்கியது. ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 392 ரன்கள் குவித்தது.  துவக்க வீரர்களானடேவிட் வார்னர் 93 பந்துகளில் 106 ரன்கள் குவித்தார். அதேபோல மார்னஸ் லாபுசாக்னே 99 பந்துகளில் 124 ரன்கள் விளாசினார். மேலும் டிராவிஸ் ஹெட்  64 ரன்களும், ஜோஷ் இங்லிஸ் 50 ரன்களும் எடுத்தனர். பின்னர் ஆடிய தென்னாப்பிரிக்க அணி 41.5 ஓவரில் 269 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தென்னாப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக ஹென்றிச் கிளாசன் மற்றும் டேவிட் மில்லர் ஆகியோர் 49 ரன்களும், துவக்க வீரர்களான கேப்டன் டெம்பா பவுமா 46 ரன்கள் மற்றும் டி காக் 45 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு அவுட் ஆகினர். இதனால் 123 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது.