மறைந்த ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக கூறி தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அவர் மீது வழக்குப்பதிவு செய்தது. இளவரசி, சசிகலா, சுதாகரன் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக 66 கோடி ரூபாய் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கு பெங்களூரு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் ஜெயலலிதா உட்பட 4 பேருக்கும் 4 வருடங்கள் சிறை தண்டனை  விதித்து  நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இதை எதிர்த்து ஜெயலலிதா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் தீர்ப்பை  நீதிபதிகள் ரத்து செய்தனர். அதன் பிறகு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தில் தனி நீதிபதியின் உத்தரவை நீதிபதிகள் உறுதி செய்தனர். ஆனால் தீர்ப்பு வருவதற்கு முன்பாக ஜெயலலிதா இறந்து விட்டதா அவருடைய பெயர் குற்றவாளிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பெங்களூருவை சேர்ந்த நரசிம்ம ரெட்டி என்பவர் மறைந்த ஜெயலலிதாவின் சொத்துக்களை ஏலம் விட வேண்டும் என கடிதம் எழுதினார். இந்நிலையில் தற்போது ஜெயலலிதாவின் சொத்துக்களை ஏலம் விடுவதற்கு கர்நாடகா நீதிமன்றம் வழக்கறிஞர் கிரண் எஸ். ஜாவலியை நியமித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் இவர் ஜெயலலிதாவின் சொத்துக்களை ஏலம் விடுவதற்கான அனைத்து நடைமுறைகளையும் மேற்கொள்வார் என்று கூறப்பட்டுள்ளது.