தமிழகத்தில் முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் நிலை-1 மற்றும் கணினி பயிற்றுனர் நிலை-1 ஆகிய பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தின் வாயிலாக இன்று வெளியிடப்படுகிறது. கல்வி தகுதி வயது மற்றும் விண்ணப்பம் செய்வதற்கான அனைத்து விவரங்களும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க ஏதுவாக 10.7.2025 முதல் 12.8.2025 பிற்பகல் 5 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

எனவே விண்ணப்பதாரர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கும் போது உரிய விவரங்களை சரிபார்த்து அதன் பின்னர் விண்ணப்பிக்க வேண்டும். அறிக்கை தொடர்பான கோரிக்கை மனுக்கள் [email protected] என்ற மின்னஞ்சல் வாயிலாக மட்டுமே அனுப்ப வேண்டும். இதர வழியில் அனுப்பும் கோரிக்கை மனுக்கள் பரிசீலிக்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள ஆசிரியர்கள் www.trb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு செப்டம்பர் 28ஆம் தேதி முதல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.