
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் கணவர் மனைவி இடையே ஏற்பட்ட சண்டை திகைப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில் மனைவி நீமா தன் கணவர் ராகுல் ஒன்றாக குளிக்க என்னை வற்புறுத்துகிறார் இதை நான் மறுத்ததால் குடிபோதையில் தன்னை மொபைல் சார்ஜரை வைத்து கழுத்தை நெரித்துள்ளார் என குற்றம் சாட்டினார். இதனை தொடர்ந்து வரதட்சனை கொடுமை செய்ததாகவும் காவல்துறையில் புகார் அளித்தார்.
சிறிது நாள் கழித்து தன் கணவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட புகாரை நீமா வாபஸ் வாங்கியுள்ளார். இதனை தொடர்ந்து நீமா இன்று மீன் குழம்பு வைத்து இருந்தார் இதனை சாப்பிட்ட ராகுல் மீன் குழம்பில் புளி கரைசல் சரியாக இல்லை என நீமாவை தாக்கி உள்ளார். இதனால் அவரது கண் மற்றும் உதடு சேதம் அடைந்துள்ளது. நீமாவை அடித்து அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் நீமாவை கோழிக்கோடு மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இதை குறித்து கோழிக்கோடு மருத்துவமனை ஊழியர்கள் காவல் துறையிடம் தெரிவித்தனர் தகவலின்படி போலீசார் மருத்துவமனைக்கு வந்து நீமாவிடம் விசாரித்தார். இதனை தொடர்ந்து நீமாவின் தந்தை போலீசாரிடம் புகார் அளித்து தனது மகளை தனது வீட்டிற்கு அழைத்துச் செல்வதாக உறுதிப்படுத்தினார்.
கணவர் மீது உள்ள புகாரை வாபஸ் வாங்கிய 1 ½ மாதத்தில் மனைவிக்கு நடந்த இந்த கொடுமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது