இஸ்ரேல் விமானப்படைகள் லெபனான் மீது நடத்திய வான்வழி தாக்குதலில் 182 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஹிஸ்புல்லாக்களின் ஆயுதக் கிடங்குகளை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 737-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இத்தாக்குதலால் லெபனான் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியும் அச்சமும் நிலவுகிறது.

கடந்த வாரம், சைபர் தாக்குதல்களின் மூலம் லெபனானில் உள்ள பல்வேறு இடங்களில் பேஜர்கள் மற்றும் வாக்கி டாக்கி போன்ற சாதனங்களை வெடிக்கச் செய்து 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில் இஸ்ரேலின் இந்தத் தாக்குதல், லெபனான்-இஸ்ரேல் இடையேயான மோதல்களை மேலும் தீவிரமாக்கியுள்ளது.

இரு நாடுகளும் தங்களது பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஆதிக்கம் தொடர்பாக கடுமையான எதிர்ப்புகளைத் தழுவி வருகின்றன.