ஆந்திர மாநிலத்தில் உள்ள காக்கி நாடா பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ். இவருக்கு சின்னி என்ற மகனும், ராஜு என்ற பேரனும் உள்ளனர். இந்த நிலையில் தீபாவளி அன்று மூவரும் தலை நசுங்கிய நிலையில் பரிதாபமாக உயிரிழந்து கிடந்தனர். இது குறித்து அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.இது குறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் கூறியதாவது, ரமேஷ் குடும்பத்தினருக்கும் அதே பகுதியில் வசிக்கும் மற்றொரு குடும்பத்தினருக்கும் இடையே தீபாவளி அன்று சண்டை ஏற்பட்டுள்ளது.

இந்த சண்டைக்கான காரணம் முன் விரோதம் ஆகும். இந்த மோதலில் மூன்று பேரும் கொலை செய்யப்பட்டுள்ளனர். மூன்று சடலங்களும் மீட்கப்படும் பொழுது சடலங்களின் கைகளில் அரிவாள்கள் இருந்தது முக்கிய தடையமாக கருதப்படுகிறது. இவ்வாறு காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. தீபாவளியன்று மூன்று பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.