மதுரையில் இன்று தனது தொண்டர்களுடன் ஆலோசனை நடத்திய பின் பேட்டியளித்த ஓபிஎஸ் கூறியதாவது “சசிகலாவை உறுதியாக சந்திப்பேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதே தனது விருப்பம். இப்போது வரை அதிமுகவின் சட்டவிதிகளின் படி ஒருங்கிணைப்பாளராக நானும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் இருக்கிறோம்.

இருவருக்கும் 2026ம் வருடம் வரை பதவிகாலம் இருக்கிறது. இடைத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை கேட்டு வந்தால் கையொப்பமிடுவேன். இதற்கிடையில் இடைத் தேர்தல் தொடர்பாக சசிகலாவை உறுதியாக சந்திப்பேன். அதிமுக-வின் ஒன்றரை கோடி தொண்டர்களும், தமிழ்நாட்டு மக்களும், பாஜக-வும் அதிமுக ஒன்றுபட வேண்டும் என விரும்புகின்றனர். கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் தொடர்பாக தமிழக அரசிடம் விளக்கம் கேட்டுள்ளேன்” என்று அவர் பேசினார்.