அமெரிக்காவில் கெல்லி என்ற பெண் வசித்து வருகிறார். இவர் சம்பவ நாளன்று ஆரஞ்சு ஜூஸ் குடிப்பதற்காக வெளியே சென்றுள்ளார். அப்போது பைனி குரோவ் பகுதி வழியாக செல்லும் போது அவரது கவனத்தில் ஒரு லாட்டரி கடை தென்பட்டது. உடனே லாட்டரி வாங்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அருகே சென்றுள்ளார்.

அவரது அதிர்ஷ்டத்தை சோதிப்பதற்காக சுமார் ரூபாய் 1600 கொடுத்து ஒரு லாட்டரி வாங்கியுள்ளார். தற்போது அந்த லாட்டரியில் ரூபாய் இரண்டு கோடி பரிசு விழுந்துள்ளதாக லாட்டரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கெல்லி கூறியதாவது,” இதை நான் எதிர்பார்க்கவே இல்லை, இது எங்கள் வாழ்க்கை மாற்றிய தருணமாகும்”எனக் கூறினார்