கடகம் ராசி அன்பர்களே..!
திட்டமிட்ட பணியை நிறைவேற்ற முன்னேற்பாடு செய்வீர்கள்.

ரகசியங்களை பாதுகாக்க வேண்டும். மற்றவர்களை நம்ப வேண்டாம். தேவையில்லாத நம்பிக்கைக்கு இடங்கொடுக்க வேண்டாம். கூடுதல் வருமானத்தால் தேவைகள் பூர்த்தியாகும். பெண்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தனவரவு அதிகரிக்கும். தடைகள் விலகிச்செல்லும். தொழில் சம்பந்தமாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். கடன்கள் வசூலாகும். வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

வசீகரமான தோற்றம் வெளிப்படும். அதனால் காதலில் பயப்படக்கூடிய சூழல் உண்டாகும். சில விஷயங்களில் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். குடும்பத்தில் இன்று சுமுகமான சூழ்நிலை நிலவும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகரித்துக் காணப்படும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணியவேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 3.
அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்.