தனுசு ராசி அன்பர்களே…!
இன்று தோல்வியே வெற்றிக்கு முதல்படி என்பதை உணர்ந்து கொண்டவர் நீங்கள்.
தோல்வியைக் கண்டு துவளாதவர்கள். முன்னேறுவதற்கு முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வெற்றி எப்பொழுதுமே உங்கள் பக்கம் இருக்கும். உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் கொள்ளுங்கள். தாயின் உடல் ஆரோக்கியத்திலும் கொஞ்சம் கவனம் கொள்ளுங்கள். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலைகளை கவனமாக செய்து முடித்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். செயல் திறமை அதிகரிக்கும். குடும்பத்தில் சுகமும் நிம்மதியும் கூடும். குடும்பத்திற்கு அதிகப்படியான வருமானமும் ஈட்டி கொடுப்பீர்கள். கணவன் மனைவிக்கு இடையே சகஜ நிலை காணப்படும். குழந்தைகள் திறமையைக்கண்டு அவர்களை பாராட்டுவீர்கள். இன்று மனம் கொஞ்சம் அலைபாய கூடும். அதை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள். தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். யாருக்கும் எந்தவித அறிவுரையும் சொல்ல வேண்டாம். அதேபோல் கருத்துக்களைப் பரிமாறும் பொழுது வாக்குவாதங்கள் இல்லாமல் பேசுங்கள். செய் தொழில் உள்ளவர்களுக்கு ஓரளவே முன்னேற்றம் கிடைக்கும். புதிய முயற்சிகளை கண்டிப்பாக தள்ளிப்போட வேண்டும். இன்று காதலர்களுக்கு எந்த விதத்திலும் சிறப்பு தான். கூடுமானவரை பேச்சில் மட்டும் கவனம் இருந்தால் போதுமானது. கோபமான பேச்சை விடுத்து விட்டு, கொஞ்சம் அக்கறையுடன் நடந்து கொள்ளுங்கள். அனைவரிடமும் அன்பு கிடைக்கும்.
இன்று பெரியோர் ஆசியும் ஆலோசனையும் பரிபூரணமாக கிடைக்கும். அதேபோல் விவசாயிகளுக்கு இன்றைய நாள் நல்ல முன்னேற்றம் கொடுக்கும் நாளாகவே இருக்கும். எந்தவித கவலையும் இல்லை. நீங்கள் கேட்ட இடத்தில் பணம் வந்து சேரும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது மஞ்சள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே இன்று எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்து வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 3 மற்றும் 5.
அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்.