விருச்சிகம் ராசி அன்பர்களே..!
இன்று வாய்ப்புகள் தேடிவரும்.

சோதித்து முடிவுகளை எடுக்க வேண்டும். பெற்றோரின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். இன்று உறவினர்களின் வருகையால் மனம் மகிழ்ச்சியடையும். பணம் பல வழியில் வந்துசேரும். பேசினால் காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். காலதாமதம் ஏற்படும். முடிவுகள் எடுக்கும் பொழுது கவனத்துடன் எடுக்க வேண்டும்.

நிதானத்தை மேற்கொண்டு அனைத்து விஷயங்களையும் அணுகவேண்டும். யாரையும் குறைக்கூற வேண்டாம். வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். வாக்குறுதிகள் எதுவும் கொடுக்க வேண்டாம். ஜாமீன் கையெழுத்து எதுவும் போட வேண்டாம். உணவு விஷயத்தில் கவனத்துடன் இருக்க வேண்டும். சரியான நேரத்திற்கு உறங்க வேண்டும். தேவையில்லாத மன குழப்பத்தில் ஈடுபடவேண்டாம். மாணவர்கள் முயற்சிகள் செய்து படிக்க வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம்பச்சை நிறத்தில் ஆடை அணியவேண்டும். இளம்பச்சை உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே காலையில் எழுந்ததும் சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று வழிபட்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 4.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் பச்சை நிறம்.