துலாம் ராசி அன்பர்களே..!
இன்று வாக்குறுதிக்கு மாறாக சிலர் செயல்படக்கூடும்.

சொன்ன சொல்லை நிறைவேற்றாமல் இருப்பார்கள். இதனால் உங்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும். தொழில் வியாபாரத்தில் லாபம் சுமாராகதான் இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையை சந்திக்கக்கூடும். பெண்கள் உடல்நலனில் அக்கறை காட்ட வேண்டும். அறிமுகம் இல்லாதவர்களிடம் நெருக்கம் வேண்டாம். உத்தியோகஸ்தர்கள் தேவையற்ற இடமாற்றத்தை சந்திக்க வேண்டியதிருக்கும். கூடுதல் பொறுப்புகள் ஏற்படுவதால் அதிகநேரம் உழைக்க வேண்டியதிருக்கும். உடல்நிலையில் சோர்வு உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தேவையற்ற பயணங்களால் அலைச்சல் உண்டாகும். குடும்பத்தில் நிதானமான போக்கு நிலவும்.

முன்கோபம் எழக்கூடும். பெரிய முதலீடுகளை பயன்படுத்த வேண்டாம். காதலில் உள்ளவர்களுக்கு நல்ல நாளாக இன்றைய நாள் அமையும். மாணவ மாணவியர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணியவேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள், இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 3.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.