கன்னி ராசி அன்பர்களே..!
இன்று பாராட்டும், புகழும் கூடும் நாளாக இருக்கும். பக்குவமாகப் பேசி நீங்கள் காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள்.
தொழில் முன்னேற்றத்திற்காக பயணத்தை மேற்கொள்வீர்கள். மாலையில் உறவினர்களால் விரயம் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் கடினமான பணியை செய்ய வேண்டியதிருக்கும். மனம் தளராமல் இருப்பது மிகவும் நல்லது. குடும்பத்தில் அமைதி கொஞ்சம் குறையலாம். கணவன் மனைவிக்கிடையே திடீர் மனஸ்தாபம் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும்.
மனதில் புதிய தெம்பும் உற்சாகமும் பிறக்கும். பண விஷயத்தில் யாரையும் நம்ப வேண்டாம். இன்றைய நாளை நீங்கள் நிதானத்துடன் அணுகினால் வெற்றி உங்கள் பக்கம் இருக்கும். காதலில் உள்ளவர்கள் பொறுமையுடன் அணுகவேண்டும். மாணவ மாணவியர்கள் எந்தவொரு விஷயத்திலும் யோசித்து செய்தால் வெற்றி நிச்சயம்.
முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம்நீல நிறத்தில் ஆடை அணியவேண்டும். இளம் நீலம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்து வாருங்கள், காரியங்கள் உங்களுக்கு நல்லபடியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தென்கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 3 மற்றும் 5
அதிர்ஷ்டமான நிறம்: இளம் நீலம் மற்றும் மஞ்சள் நிறம்.