
தசுன் ஷானகா தலைமையில் ஆசியக் கோப்பைக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையைத் தவிர மற்ற அனைத்து அணிகளும் ஆசியக் கோப்பை 2023க்கான தங்கள் அணிகளை முன்னதாகவே அறிவித்துள்ளன. ஆசியக் கோப்பை இன்று பாகிஸ்தான் – நேபாளம் அணிகள் மோதும் ஆட்டத்துடன் தொடங்க உள்ளது. இதனிடையே இலங்கை தங்கள் அணியை அறிவிக்கவில்லை. இருப்பினும், போட்டி இன்று தொடங்கும் நிலையில், அவர்கள் 15 பேர் கொண்ட அணியை நேற்று அறிவித்துள்ளனர், மேலும் தசுன் ஷானகா தலைமையில் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசியக் கோப்பை தொடரில் இலங்கை அணி தனது முதல் போட்டியில் பங்களாதேஷுக்கு எதிராக ஆகஸ்ட் 31ஆம் தேதி, அதாவது நாளை பல்லேகலேயில் விளையாடவுள்ளது. மீதமுள்ள 5 அணிகளும் ஆசிய கோப்பைக்கான தங்கள் அணியை அறிவித்துள்ளன, ஆகஸ்ட் 27 அன்று ஆப்கானிஸ்தான் தங்கள் ஆசிய கோப்பைக்கான அணியை சமீபத்தில் அறிவித்தது.
ஆசிய கோப்பைக்கான இலங்கை அணியை ஏன் இன்னும் அறிவிக்கவில்லை என கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் தற்போது அணியை அறிவித்துள்ளார். இலங்கை அணி காயங்கள் மற்றும் கோவிட் பிரச்சனை காரணமாக அணியை கட்டமைக்க கால அவகாசம் வழங்கப்பட்டது. அதனால் தான் சிறந்த அணியை தேர்வு செய்ய முடியவில்லை. ஆசிய கோப்பை நெருங்கி வரும் நிலையில், இன்று அல்லது நாளை அவர்கள் அணியை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஜிம்பாப்வேயில் நடைபெற்ற ஐசிசி உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை, இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பைக்கு தகுதி பெறுவதற்காக விளையாடிய 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றது. ஆனால் வனிந்து ஹசரங்கா, லஹிரு குமார, டில்ஷான் மதுஷங்கா மற்றும் துஷ்மந்த சமிர போன்ற பல பெரிய வீரர்களின் காயங்கள் அவர்களின் ஆசியக் கோப்பை நம்பிக்கைக்கு அடியை ஏற்படுத்தியுள்ளன. இலங்கை தனது குழுவில் பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கடினமான போட்டியை கொண்டுள்ளது.
இலங்கையின் இரண்டாவது குரூப் ஆட்டம் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக லாகூரில் நடைபெறவுள்ளது. சூப்பர்-4 ஐ அடைய ஒவ்வொரு அணியும் குறைந்தது ஒரு போட்டியில் வெற்றி பெற வேண்டும். ஆசியக் கோப்பை தொடரில் இலங்கை அணியின் நட்சத்திர வீரர்கள் 4 பேர் காயம் காரணமாக வெளியேறியுள்ளனர். துஷ்மந்த சமீரா மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோருக்குப் பிறகு வேகப்பந்து வீச்சாளர் டில்ஷான் மதுஷங்கவும் காயமடைந்துள்ளார், அதே வேளையில் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமாரவும் ஆசியக் கோப்பையையிலிருந்து வெளியேறியுள்ளார்.
மறுபுறம், ஆகஸ்ட் 25 அன்று, இரண்டு இலங்கை வீரர்களான அவிஷ்கா பெர்னாண்டோ மற்றும் விக்கெட் கீப்பர் குஷால் பெரேரா ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதில் குசல் பெரேரா முன்னேற்றமடைந்து வருவதாக புரிந்து கொள்ளப்பட்டு, அவர் முழுமையாக குணமடைந்ததும் அணியில் சேருவார். அதே நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த அவிஷ்கா பெர்னாண்டோ, அதிலிருந்து மீண்டு கிடைக்கப் பெற்றார் ஆனால் தேர்ந்தெடுக்கப்படவில்லை.
இதே அணி உலகக் கோப்பையில் சிறிய மாற்றங்களுடன் விளையாட வாய்ப்புள்ளதால் ஆசிய கோப்பைக்கான அணி தேர்வும் இலங்கைக்கு சோதனையாக அமைந்தது. இதனால் தான் 2023 ஆசிய கோப்பைக்கான இலங்கை அணியை தாமதமாக அறிவித்துள்ளது. தசுன் ஷானக்காவின் தலைமையில் அந்த அணி விளையாடவுள்ளது. குசல் மெண்டிஸ் அவருக்கு துணை கேப்டனாக இருப்பார். அதே சமயம் ஐபிஎல்லில் சென்னை அணிக்காக ஆடிய பத்திரனா அணியில் இடம்பெற்றுள்ளார். எனினும், வனிந்து ஹசர்கா காயம் காரணமாக விலகியுள்ளார் என்பது இலங்கைக்கு பெரிய அடியை கொடுத்துள்ளது. தொடை வலி உள்ள ஹசரங்கா, போட்டியில் ரிஸ்க் எடுத்து ஆடலாம், ஆனால் உலகக் கோப்பை மிகவும் நெருக்கமாக இருப்பதால், காயத்தை மோசமாக்கும் என்பதால் நீக்கப்பட்டுள்ளார்.
ஆசிய கோப்பைக்கான இலங்கை அணி :
தசுன் ஷனகா (கேப்டன்), பதும் நிஷாங்கா, திமுத் கருணாரத்ன, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ் (துணை கேப்டன்), சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, சதீர சமரவிக்ரம, மகேஷ் திக்ஷனா, துனித் வெல்லலகே , மதிஷ பத்திரனா, கசுன் ராஜிதா, துஷான் ஹேமந்தா, பினுரா பெர்னாண்டோ, பிரமோத் மதுஷன்.
Sri Lanka unveils its powerhouse squad for the Asia Cup 2023! 🇱🇰🏆 #AsiaCup2023 pic.twitter.com/duAXDfQyFQ
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) August 29, 2023