தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அரவிந்த்சாமி ஆரம்ப காலகட்டத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருந்தார். பின் நீண்ட காலமாக நடிக்காமல் இருந்த நிலையில் மீண்டும் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான போகன் திரைப்படத்தில் வில்லனாக ரீ-என்ட்ரி கொடுத்தார். மேலும் அந்த திரைப்படத்தில் அனைவரின் கவனத்தையும் பெற்றார். இதன் பிறகு தற்போது மீண்டும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கின்றார். இது குறித்து போஸ்டர் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கின்றார்.
அந்த வகையில் அரவிந்த்சாமி தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிக்கும் கஸ்டடி திரைப்படத்தில் ராஜு என்ற வேடத்தில் வில்லனாக நடித்து வருகின்றார். இது குறித்து போஸ்டரை படக்குழு அண்மையில் வெளியிட்டிருந்த நிலையில் தற்போது அரவிந்த்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றார். இதை பார்த்த ரசிகர்கள் உற்சாகமாகி போஸ்டரை பகிர்ந்து வருகிறார்கள்.
Hello @vp_offl @chay_akkineni @realsarathkumar it’s Razooo not Raju.. call me Raju again at your own risk 😡… only @IamKrithiShetty got it right. You can only attempt to keep Razooo in #custody ..let’s see 💪🏻 pic.twitter.com/gFIFo5QMo6
— arvind swami (@thearvindswami) March 3, 2023