வம்சம், மௌனகுரு, டிமாண்டி காலனி, ஆறாது சினம், இரவுக்கு ஆயிரம் கண்கள், கே-13 உட்பட பல படங்களில் நடித்து பிரபலமானவர் அருள்நிதி. இப்போது இவர் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் “திருவின் குரல்” படத்தில் நடிக்கிறார். ஹரிஷ் பிரபு இயக்கும் இப்படத்தில் ஆத்மிகா நாயகியாக நடிக்க பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

சாம் சி.எஸ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி வைரலாகியது. அதன்பின் இப்படத்தின் டிரைலர் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி இப்படத்தின் டிரைலர் வெளியாகி சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. திருவின் குரல் படம் வரும் ஏப்ரல் 14-ம் தேதி திரையரங்குகளில்  ரிலீஸ் ஆகவுள்ளது குறிப்பிடத்தக்கது.