
அருணாச்சல பிரதேச எல்லை விவகாரத்தில் பல ஆண்டுகளாக இந்தியா மற்றும் சீனா இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில் அங்குள்ள இடங்களுக்கு சீனா மறுபெயரிட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து விளக்கம் அளித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், அருணாச்சல பிரதேசத்தில் உள்ள இடங்களுக்கு பெயரிட சீனா தொடர்ந்து ஆபத்தான முயற்சிகளை செய்து வருகிறது.
அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் பிரிக்க முடியாத ஒரு பகுதியாக உள்ளது. அது எப்போதும் இருக்கும். கற்பனையான பெயர் சூட்டல்களால் இந்தியாவின் பகுதியை ஒருபோதும் சீனா சொந்தம் கொண்டாட முடியாது என்று தெரிவித்துள்ளது. மேலும் சீன அரசின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான க்ளோபல் டைம்ஸ் பத்திரிகையின் எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது.