கர்நாடகா மாநிலம் பெலகாவியின் காதே பஜார் அருகே கோவா முன்னாள் எம்.எல்.ஏ லாவூ மம்லேதரின்(69) காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஸ்ரீனிவாஸ் லாட்ஜுக்கு அவர் சென்று கொண்டிருந்தபோது, அவரது கார் ஆட்டோ மீது மோதியது. இதில் ஆத்திரமடைந்த ஆட்டோ ஓட்டுனர் லாட்ஜ் வாசலிலே வைத்து எம் எல் ஏ-வை தாக்கினார். இதில் மயங்கி விழுந்த எம்எல்ஏ மூச்சு பேச்சின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், அவரது உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதோடு அவரை தாக்கிய ஆட்டோ ஓட்டுனரை கைது செய்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அந்த லாட்ஜின் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.