
தொழில்நுட்பம் வளர்ந்து வருகின்ற நிலையில், அனைத்தும் டிஜிட்டல் ஆகிவிட்டது. இந்நிலையில் ஆன்லைன் பண பரிவர்த்தனைகளும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இவ்வாறு ஆன்லைன் மூலம் பணப்பரிவர்த்தனை செய்பவர்களுக்கு பல்வேறு சலுகைகள் மற்றும் கேஷ் பேக் வழங்கப்பட்டு வருகிறது. இதில் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களுக்கு முக்கிய பங்கு வகிக்கின்றது. ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் தனது சூப்பர் பிரீமியம் பிரைவேட் கிரெடிட் கார்ட் தவிர அனைத்து கிரெடிட் கால்களிலும் மாற்றம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.
அதாவது கிரெடிட் கார்டு மூலம் ரூபாய் 20000 கடன் பெறுபவர்களுக்கு ரிவார்டு புள்ளிகள் 3 மடங்காக அதிகரிக்க கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இது 6 மடங்காக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வரம்புக்கு கீழே உள்ள கடன்களுக்கு கூடுதல் கட்டணம் இல்லை என்றும் 1 சதவீத கிரெடிட் கார்டு கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி இந்த வரம்புக்கு மேல் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.