பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து அவரது எம்பி பதவி பறிக்கப்பட்டது. இதையடுத்து ராகுல் தகுதிநீக்கத்தை கண்டிக்கும் விதமாக கையில் பதாகைகள் ஏந்தியும், பிரதமர் மோடி அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டப்பேரவைக்குள் வந்தனர்.

இந்நிலையில் டெல்லியில் அரசு பங்களாவை காலி செய்ய சொல்லி முன்னாள் எம்பி ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மோடி என்ற பெயர் கொண்டவர்களை பற்றி அவதூறு பேசியதற்காக ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது சூரத் நீதிமன்றம். இதனால் அவரது எம்பி பதவி பறிக்கப்பட்டது. எம்பி பதவி இல்லாததால் அரசு பங்களாவையும் காலி செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.