காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2019-ம் ஆண்டு கர்நாடகாவில் பேசியதற்கு மோடி சமூகத்தினர் குறித்த அவதூறாக பேசியதாக கூறி சூரத் பாஜக எம்எல்ஏ ஒருவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 வருடங்கள் சிறை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன் பிறகு ராகுல் காந்திக்கு மேல்முறையீடு செய்ய நீதிமன்றங்கள் 30 நாட்கள் கால அவகாசம் கொடுத்து தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது.

ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வெளியிட்ட 24 மணி நேரத்திற்குள் அவரை நாடாளுமன்ற மக்களவை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தற்போது தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் ஏப்ரல் 22-ஆம் தேதிக்குள் டெல்லி துக்ளக் சாலையில் உள்ள அரசு இல்லத்தை அவர் காலி செய்ய வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.