
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானின் மகன் அமீர். இவர் தற்போது சொந்தமாக பாடல்களை கம்போஸ் செய்து வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் ஒரு பாடல் ஷூட்டிங்கில் அமீன் கலந்து கொண்ட போது திடீரென பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது அந்த ஷூட்டிங்கில் கிரேனில் தொங்கவிடப்பட்டிருந்த அலங்கார விளக்குகள் அறுந்து திடீரென விழுந்துள்ளது. அப்போது அமீன் நடுவில் நின்று கொண்டிருந்த நிலையில் திடீரென அங்கிருந்து விலகி விட்டார்.
ஒருவேளை சில நொடிகள் முன்னால் அல்லது பின்னால் அலங்கார விளக்குகள் விழுந்திருந்தால் அமீனின் தலையில் தான் விழுந்திருக்கும். இந்த சம்பவத்தால் ஷூட்டிங்கில் கலந்து கொண்ட அனைவரும் மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். மேலும் ஆமின் இது தொடர்பான தகவலை தன் வலைதள பக்கத்தில் பகிர்ந்ததோடு அது தொடர்பான புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram