தமிழகத்தில் அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. ஆசிரியர் பணிக்கு இரு தேர்வுகள் இருக்கக் கூடாது எனவும் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களை நேரடியாக பணி அமர்த்த வேண்டும் எனவும் அண்மையில் நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் போராடி வருகிறார்கள். இதற்கு பாமக கட்சியின் நிறுவனர் அன்புமணி ராமதாஸ் வரவேற்பு கொடுத்துள்ளார். அவர் ஆசிரியர் பணிக்கு இரு தேர்வுகள் இருக்கக் கூடாது. ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை நேரடியாக பணியமர்த்த வேண்டும்.

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற 60,000-க்கும் மேற்பட்டோர் பணி கிடைக்காமல் தவித்து வருகிறார்கள். போட்டி தேர்வுகள் நடத்தக்கூடாது என்ற அவர்களின் கோரிக்கை மிகவும் நியாயமானது. இந்த கோரிக்கையை தமிழக அரசு ஏற்க மறுப்பது நியாயமற்றது. முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு போட்டி தேர்வும், கல்லூரி பேராசிரியர்களுக்கு தகுதி தேர்வும் நடத்தப்படுகிறது. ஆனால் அவர்களை விட குறைந்த தகுதியும் ஊதியமும் கொண்ட இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு இரு தேர்வுகளை நடத்துவது என்பது பெரும் அநீதி. எனவே இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு தகுந்த  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.