சென்னை மாவட்ட நீதித்துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அலுவலக பணியாளர், ஓட்டுனர் என மொத்தம் 125 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மே 27ஆம் தேதி கடைசி தேதி ஆகும். இதற்கு விண்ணப்பக் கட்டணமாக 500 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. SC, ST, SCA பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை. மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.mhc.tn.gov.in/என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.