
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். தற்போது பிக் பாஸ் 8 சீசன் விரைவில் தொடங்க உள்ளது. இந்நிலையில் நிகழ்ச்சி குழுவினர்கள் போட்டியாளர்களை தேர்வு செய்வதில் தீவிரமாக இருக்கின்ற நிலையில் சின்னத்திரை நடிகர்கள் மற்றும் விஜய் டிவி நட்சத்திரங்கள் என பலரும் வருவார்கள் என கூறப்படுகிறது.
பிக் பாஸ் 8 சீசனின் தொகுப்பாளராக விஜய் சேதுபதி களம் இறங்கியுள்ளார். ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் காமெடியில் கலக்கிய காமெடி ஜாம்பவானாகிய நடிகர் செந்தில் போட்டியாளராக வர இருக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது. அவர் வந்தால் காமெடிக்கு பஞ்சமே இருக்காது என சமூக வலைதளங்களில் கருத்து பரவி வருகிறது. பிக் பாஸ் சீசன் 8 எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர்.