செய்தியாளர்களிடம் பேசிய இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், தமிழகம் மீண்டும் உத்தமர் ஓமந்தூரார் ஆட்சி…..  தமிழகத்திலே ஐயா வ.உ.சி,  பசும்பொன் முத்துராமலிங்க தேவர் போன்ற தேசியவாதிகளினுடைய கொள்கைகளை நடைமுறைப்படுத்தக் கூடிய ஒரு அமைப்பாக பாரதிய ஜனதா கட்சி இருக்கிறது. மீண்டும் காமராஜரினுடைய ஆட்சி வளர்ச்சி அரசியலை கொண்டு வரக்கூடிய ஒரு தலைவராக அண்ணாமலை அவர்கள் இருக்கிறார்கள்.

மக்களோடு தான் கூட்டணி. தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெறும் என்கின்ற அந்த சூழ்நிலை தான் இப்போது  இருக்கிறது. முதல்ல எல்லாம் தேர்தல் சூழ்நிலை எப்படி இருந்ததுன்னா…?  எம்ஜிஆர்ரா ? கருணாநிதியா ? ஜெயலலிதா அம்மாவா ?  கருணாநிதியா ? இப்படி எல்லாம் இருந்தது. ஆனால் இப்பொழுது அண்ணாமலை அவர்களா ?  அல்லது மற்ற அரசியல் கட்சிகளா ?  அப்படிங்கற நிலைமை இப்பொழுது தோன்றியிருக்கிறது.

எனவே தமிழகத்திலே அண்ணாமலையினுடைய என் மண், என் மக்கள் யாத்திரை ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. வெறும் ட்சி மாற்றம் மட்டும் அல்ல, அரசியல் மாற்றம் உருவாகி இருக்கிறது…  இன்றைக்கு தமிழகத்தில் இருக்கக்கூடிய அத்தனை மந்திரிகளும் ஊழல் மந்திரிகளாக இருக்கிறார்கள்….  இந்த ஊழல் குற்றச்சாட்டை அண்ணாமலை மட்டுமே வெளியிடவில்லை….  அவர்  டிஎம்கே பைல்ஸை வெளியிட்டார்…