பாலிவுட் நடிகையான அதிதி ராவ் தமிழில் சிருங்காரம், காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம், சைக்கோ, ஹே சினாமிகா ஆகிய படங்களில் நடித்துள்ளார். இப்போது அவர் “தாஜ்:டிவைடட் பை பிளட்” எனும் வெப் தொடரில் நடித்து வருகிறார். அதோடு இதில் அக்பர் கதாபாத்திரத்தில் நசுருதீன் ஷா நடிக்கிறார்.

இதையடுத்து அக்பரின் மகன் சலீமாக ஆஷிம் குலாட்டியும், அவரது காதலி அனார்கலியாக அதிதிராவும் நடிக்கின்றனர். இவர்கள் தவிர்த்து தாஹா ஷா பாதுஷா, சுபம் குமார் மெஹ்ரா ஆகிய முன்னணி நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். இந்த வெப் தொடரை ரான் ஸ்கால்பெல்லோ இயக்கியுள்ளார்.