தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி தனது முதல் மாநாட்டை மிகவும் பிரம்மாண்டமாக நடத்தினார். இதையடுத்து அவர் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் தவெக தலைவர் விஜய் தலைமையில் இன்று அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்க இருக்கிறது. இக்கூட்டம் பனையூர் அலுவலகத்தில் நடக்கும் என்றும் தவறாமல் அனைவரும் கலந்து கொள்ளுமாறு மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.