
மேற்கு ஆஸ்திரேலியாவில் புவியியல் ஆய்வு மையம் மற்றும் கர்டின் பல்கலைக்கழக த்தின் ஆராய்ச்சியாளர்களால் உலகின் மிகப் பழமையான விண்கல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த விண்கலானது சுமார் 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் பூமியை தாக்கி இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து கர்டின் பல்கலைக்கழக தலைமை பேராசிரியர் டிம் ஜான்சன் கூறியதாவது, நமது கிரகத்தின் பண்டைய வரலாறு குறித்த அனுமானங்களை கண்டறிய கணிசமாக உதவும். இதுதான் உலகின் மிகப் பழமையான பள்ளம் என கூறினார்.
மேற்கு ஆஸ்ரேலியாவில் வில்பரா பகுதியில் உள்ள மார்பில் பாரில் இருந்து சுமார் மேற்கு நோக்கி 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிதறல் கொம்புகள் மூலமாக இந்த பள்ளத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர் இந்த சிதறல் கூம்புகள் மணிக்கு 36,000 கிலோமீட்டர் வேகத்தில் ஒரு விண்கல் மோதியபோது அந்தப் பகுதியில் உருவாகியுள்ளது. இது உலகில் ஒரு மிகப்பெரிய கிரக நிகழ்வாக இருந்திருக்கலாம். இதன் விளைவாக 100 கிலோ மீட்டருக்கும் அதிகமான அகலம் உள்ள ஒரு பள்ளம் உருவாகி உலகம் முழுவதும் இதன் தூசுக்கள் பறந்து இருக்கும். என புவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.