மலையாளத் திரைப்படங்களில் நடிக்கும் நடிகை வின்சி அலோசியஸ். இவர் தற்போது “சூத்திர வாக்கியம்” என்ற படத்தில் நடித்துள்ளார். அந்தப் படம் வரும் 11ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

மேலும் அந்தப் படத்தில் நடிகர் ஷைன் டாம் சாக்கோ உடன் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை வின்சி படப்பிடிப்புத் தளத்தில் நடிகர் ஒருவர் போதைப் பொருள் உட்கொண்டு தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

இது சினிமா துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி கடந்த ஜூன் 8ஆம் தேதி திருச்சூரில் நடைபெற்றது. அப்போது அதில் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ஷைன் டாம் சாக்கோ அனைவரும் முன்னிலையிலும் பகிரங்கமாக வின்சி அலோசியஸிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, “நான் பொழுதுபோக்கு என்ற எண்ணத்தில் தான் அடிக்கடி இப்படி அதீதமாக நடந்து கொண்டேன். அதற்காக மிகுந்த வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்”என கூறினார். இச்சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.