தமிழ்நாடு அரசு ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு நியாயவிலைக் கடைகளில் மானிய விலைகளில் உணவு தானியங்களை வழங்கி வருகிறது. அந்தந்த மாவட்டத்தில் நியாயவிலைக் கடைகள் மூலம் பல்வேறு நிவாரண உதவிகள் வழங்கி வருகின்றன. இந்த நிலையில் தற்பொழுது தமிழ்நாடு அரசு ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பின்வருமாறு, தமிழகத்தில் மட்டும் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் ரேஷன் கார்டு விண்ணப்பித்துள்ளனர்.
ரேஷன் கார்டு விநியோகிப்பதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிற நிலையில் சென்னையில் உணவுப் பொருள் வளங்கள் துறையில் 19ஆவது மண்டல பிரிவில் மாதாந்திர குறைதீர் முகாம் நடத்த உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தக் குறைதீர் முகாம் நவம்பர் 9ஆம் தேதி காலை 9 மணியிலிருந்து மதியம் 1 மணி வரை நடைபெறும்.
இந்த முகாமின் மூலம் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல், தொலைபேசி எண் மாற்றுதல், வீட்டு முகவரி மாற்றுதல் போன்ற பல்வேறு சேவைகள் நடத்தப்படுகிறது. மேலும் நியாய விலை கடைகளில் பொருள் வாங்க முடியாத குடிமக்களுக்கு அங்கீகாரச் சான்றுகளும் அளிக்கப்படவுள்ளன. இந்த முகாமில் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான சேவைகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழக அரசு பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.