
இந்திய திரைப்பட நடிகையான சோனாக்ஷி சின்கா தன்னுடைய சமீபத்திய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் தொடர்ந்து கேள்விகளை எழுப்புவதாகவும், மேலும் சமூக வலைதளங்களில் அவர் கர்ப்பமாக இருப்பதாக வெளியாகும் செய்திகள் குறித்து பதிலளித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்ததாவது, தன்னுடைய கணவர் நேர காலம் கூட பார்க்காமல் அடிக்கடி ருசியாக சாப்பிடுவதற்கு ஏதாவது வாங்கித் தந்து கொண்டே இருப்பதால் உடல் எடை அதிகரித்து விட்டதாகவும், எனவே நான் கர்ப்பமாக இருப்பது போல் தோன்றுவதற்கு எனது கணவர் தான் காரணம் என விளையாட்டாக கூறியுள்ளார்.
மேலும் தனது கணவருடன் ஆன வாட்ஸ்அப் உரையாடல்களை ஸ்கிரீன்ஷாட் களாக எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து உள்ளார். இதன் மூலம் அவர் கர்ப்பமாக இருப்பதாக பரவி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் ஏமாற்றம் அடைந்தனர்.