த.செ ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படம் நாளை திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது. வேட்டையன் திரைப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் ஆகி மக்களிடையே அமோக வரவேற்பு பெற்றது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக இந்த படத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது.

இந்த திரைப்படத்தில் மஞ்சு வாரியர், ராணா ரகுபதி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வேட்டையன் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் நாளை ஒரு நாள் வேட்டையன் திரைப்படத்தின் சிறப்பு காட்சிகளை திரையிட தமிழ்நாடு அரசு அனுமதி கொடுத்துள்ளது. காலை 9 மணிக்கு முதல் காட்சி தொடங்க உள்ளது. இதனால் ரஜினிகாந்த் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.