தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ரமணி என்ற ஆசிரியர் வேலை பார்த்து வந்துள்ளார். அவர் இன்று வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது,  திடீரென வகுப்பறைக்குள் புகுந்த மதன் என்ற நபர், அந்த ஆசிரியரை கழுத்தில் குத்தினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்தார். உடனடியாக சக ஆசிரியர்கள் அவரை மீட்டு  மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் ஆசிரியர் குத்தி கொலை செய்யப்பட்டதற்கு, எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் கூறியதாவது, அரசு பள்ளியில் பணியில் இருந்த ரமணி என்ற ஆசிரியர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல், விடியா திமுக ஆட்சியில் கொலை என்பது சர்வசாதாரணமாக உள்ளது. இந்த அரசு சட்ட ஒழுங்கைக்காக்க தவறி உள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு அவர்கள் பணிபுரியும் இடங்களில் கூட பாதுகாப்பு துளியும் இல்லை. இந்த திமுக, சட்டம் ஒழுங்கை சீர்குலைத்துள்ளது என்று அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.