
தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பணிபுரியும் ஊழியர்கள், வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். பொது விநியோக திட்டத்தில் சில மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற உள்ளது.
இந்த போராட்டத்தின் மூலம், ரேஷன் கடைகளில் சரியான இடத்தில் தரமான பொருட்களை பொட்டலமாக வழங்க வேண்டும், இறக்கு கூலி வசூல் செய்வதை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை ஊழியர்கள் முன்வைத்துள்ளனர்.
இந்த வேலை நிறுத்தத்தால், நாளை மறுநாள் (செப்டம்பர் 5) அனைத்து ரேஷன் கடைகளும் மூடப்படும் என்பதால், பொதுமக்கள் தங்களது ரேஷன் பொருட்களை இன்று (செப்டம்பர் 4) வாங்கிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.