
‘All EYES ON RAFAH’ என்று பாலிவுட் பிரபலங்கள் மற்றும் எழுத்தாளர்கள் பலர் பதிவிட்டு வரும் நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் தெவாடியா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டா ஸ்டோரியில், ‘ALL EYES HINDUS IN PAKISTAN’ என்று குறிப்பிட்டு பாகிஸ்தானில் இந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அவரது பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.