தென் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் வழக்கமாக காலை 2. 40 மணிக்கு திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு வரும். ஆனால் நேற்று காலை 3 மணிக்கு ரயில் வந்தடைந்தது. இதனை அடுத்து 2 மணி நேரம் தாமதமாக 4.58 மணிக்கு ரயில் திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டு சென்றது. இதேபோல அனந்தபுரி எக்ஸ்பிரஸ் 5:55 மணிக்கு திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு வந்து 3 மணி நேரம் தாமதமாக 9 மணிக்கு திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளது.

இந்நிலையில் சிக்னல் கோளாறு மற்றும் தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால் தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் வேறு மார்க்கத்தில் இயக்கப்படுகிறது. அதன்படி திண்டுக்கல்லில் இருந்து மதுரை வழியாக திருநெல்வேலி நாகர்கோவில் செல்லும் ரயில்கள் திண்டுக்கல்லில் இருந்து பழனி, பொள்ளாச்சி வழியாக இயக்கப்பட்டுள்ளது. மும்பையில் இருந்து நாகர்கோவில் வந்த ரயிலும் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் 3 மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டு தாமதமாக புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் மிகவும் சிரமப்பட்டனர்.