
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதிலும் குறிப்பாக சைபர் கிரைம் தாக்குதல்கள் என்பது அதிகரித்து விட்டது. இன்று பெரும்பாலான மக்கள் சிலிண்டர் பயன்படுத்தி வரும் நிலையில் தற்போது சிலிண்டர் பயனாளிகளை மர்ம நபர்கள் குறி வைத்துள்ளனர்.
அதாவது தற்போது கேஸ் இணைப்பு துண்டிக்கப்படும் என்று எஸ்எம்எஸ் அனுப்பிய சிறிது நேரத்தில் நுகர்வோரை தொடர்பு கொண்டு நிலுவை தொகையை செலுத்தும் படி கூறி மோசடி செய்வதாக கேஸ் நிறுவனங்கள் எச்சரிக்கின்றன. இதற்கு முன்னதாக மின் இணைப்புகளை துண்டிப்பதாக கூறி மோசடிகள் நடைபெற்றது. இதனால் பொதுமக்கள் சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.