சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பகுதியில் அமைந்துள்ள பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித் குமார், கடந்த ஜூன் 27ஆம் தேதி காலையில், திண்டுக்கல் அரசு கல்லூரி பேராசிரியாக பணியாற்றி வரும் நிகிதா என்பவரின் புகார்  தொடர்பாக, விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியினர் திருப்புவனத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி நாம் தமிழர் கட்சிக்கு சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளனர். அதாவது தேரோட்டம் நடைபெறும் அன்றைய நாளில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கொடுக்கவில்லை என்பதற்காக தடையை மீறி போராட்டம் நடத்துவோம் என்று கூறுவது அரசியல் கட்சிக்கு அழகல்ல என்று கூறியுள்ளார்.

சட்டத்திற்கு முன் அனைவரும் சமமானவர்களே. ஒரு அரசியல் கட்சிக்கு போராட்டம் நடத்த ஆர்ப்பாட்டம் நடத்த உரிமை உள்ளது. ஆனால் மனுதாரர் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அதோடு மனுதாரர் தரப்பில் போராட்டம் நடத்த அனுமதி கோரி புதிதாக மனு அளிக்க வேண்டும். அந்த மனுவை காவல்துறையினர் 24 மணி நேரத்தில் பரிசீலித்து உரிய முடிவெடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.