தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டிற்காக திடல் அமைக்கும் பணி கடந்த சில வாரங்களாகவே நடைபெற்றது. இதனை தொழிலாளர்கள் இரவும், பகலும் பாராமல் பெண்கள் அமர தனியிடம், விஐபிகளுக்கு தனி இடம் என திடல் முழுவதும் தொண்டர்களின் வசதிக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த மாநாட்டிற்காக தமிழ்நாடு முழுவதும் இருந்து தொண்டர்கள் வந்தனர். தமிழ்நாடு மட்டுமல்லாது கர்நாடகா, கேரளாவில் இருந்தும் மக்கள் வந்துள்ளனர்.

இந்த மாநாட்டில் பல்வேறு நாட்டுப்புற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் சுமார் 8 லட்சம் மக்கள் பங்கேற்றனர். அது மட்டுமின்றி மாநாட்டு திடல் வெளியில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் எல்இடி மூலம் விஜய்யின் உரையாடலை கண்டு களித்தனர். இது போன்ற பிரம்மாண்ட அலங்காரத்தை வேறு எங்கும் பார்த்ததில்லை என மக்கள் ஆச்சரியமடைந்தனர். இந்நிலையில் நேற்று வர முடியாதவர்களும், அந்த வழியாகச் செல்லும் பொது மக்களும் மாநாட்டு திடலின் முகப்பு வாயில் முன்பும், மேடை மற்றும் கட்டவுட் முன்பும் செல்பி எடுத்துச் சென்றனர்.