
கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ள உலகிலேயே மிக உயரமான பெண்மணி மற்றும் உலகிலேயே மிக உயரம் குறைவான பெண்மணி ஆகிய இருவருக்கும் 2024 கின்னஸ் தினத்தை ஒட்டி விருதுகள் வழங்கப்பட்டன. உலகிலேயே மிக உயரமான பெண்மணி ஆக கருதப்படும் துருக்கி நாட்டைச் சேர்ந்த ருமேசா(27) 7 அடி 1 அங்குலம் (215.16 சென்டிமீட்டர்) மிக உயரமான பெண் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இதேபோன்று உலகிலேயே மிக உயரம் குறைந்த பெண்மணியாக இந்தியாவை சேர்ந்த ஜோதி அம்கே (30) 2 அடி 1 அங்குலம் (62.8 சென்டிமீட்டர்) என்ற சாதனையை படைத்துள்ளார். இவர்கள் இருவரும் லண்டன் நகரில் உள்ள மிகப்பெரிய ஹோட்டல் ஆன சாவோய் ஹோட்டலில் தேநீர் அருந்துவதற்காக சந்தித்த வீடியோவை உலக சாதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளனர்.
View this post on Instagram